தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3675


ண்டாள்   கொல்லெனத்   தலைவி  கருதுமாற்றான்  தோழி  கூறவே
தலைவி மறை புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று.

“கயமலருண்கண்ணாய்,,, அங்க  ணுடைய  னவன்”  (கலி.37)
என்பதனுள்  “மெய்யறியா  தேன்போற் கிடந்தேன்” என்புழி முன்னர்
மெய்யறி  வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை
பிழைத்துக்  கூறியது  வழுவேனும்  இவளுந்  தலைவனும்  இவ்வாறே
செறிந்தமை  யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவி
யென்பது பயனாம்.

“மள்ளர் குழீஇய விழவி னானும்” (குறுந்.31) “அருங்கடியன்னை”
(நற்.365) “பாம்பு மதனழியும் பானாள் கங்குலும், அரிய வல்லமன்
இகுளை”
  (அகம்.8)  என்பனவற்றுள்  தலைவி  தேடிச்  சென்றதுஞ்
செல்வாமென்றதுஞ்   சிறைப்புறமாக   வரைவுகடாயது.  பொருட்பயன்
றருதலின் அறக்கழிவுடைய வேனும் அமைந்தன.

இது, ‘பல்வேறு  கவர்பொரு  ணாட்டத்தான்’  (தொல்.பொ.114)
அறக்கழிவுடையனவுங்   கூறப்பெறுமென்றமைப்பது   பெரும்பான்மை.
இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க.         (24)

மேலதற்கொரு புறனடை
 

219.
மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க
நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே.
 

இது,  மேல்  அறக்கழிவுடைத்தாயினுமம்  அது  பொருட் பயம்படு
மென்றார்,   அப்பொருளினை   இது   வென்றலின்   மேலதற்கொரு
புறனடை.

(இ-ள்.)  மிக்க  பொருளினுள் - முன்னர் அகப்பொருட்குப் பயம்
படவரினென்று  வழுவமைத்த  பொருளின்  கண்ணே;  நாணுத்தலைப்
பிரியா  நல்வழிப்  பொருள்வகை  படுத்துப்  புணர்க்க  - தலைவியது
நாண்     அவளிடத்து    நின்று    நீங்காமைக்குக்    காரணமாகிய
நன்னெறியாகிய  பொருட்கூறுபாடுகளை  உள்ளடக்கிப் படுத்துக் கூறுக
எ-று.

“நெருந  லெல்லை”  (அகம்.32)  என்பதனுள்,  நெருநல்  யான்
காக்கின்ற  புனத்து  வந்து  ஒரு  தலைவன்  தன்  பெருமைக்கேலாச்
சிறுசொற்  சொல்லித்  தன்னை யான் வருத்தினேனாகக் கூறி என்னை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:17:16(இந்திய நேரம்)