தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3738


சிறந்து வருமாறு:-  

‘‘முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை போதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின்நாறும்
ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.’’
   (அகம்.4)
  

இது  குறித்த காலம் வந்ததும், அவரும் வந்தாரென ஆற்றுவித்தது.
இக்   களிற்றியானைநிரையுள்,  முல்லைக்கு  முதலுங்  கருவும்  வந்து
உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
  

‘‘கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த
வாணிற வுருவின் ஒளிறுபு மின்னிப்
பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்
புயலே றுரைஇய வியலிருள் நடுநாள்
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற்
றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப்
படாஅ வாகுமெங் கண்ணென நீயும்
இருள்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி
வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வரவரி தென்னாய்
வரவெளி தாக வெண்ணுதி யதனான்
நுண்ணிதிற் கூட்டிய பன்மா ணாரந்
தண்ணிது கமழு நின்மார் பொருநாள்
அடைய முயங்கே மாயின் யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை யறியினு மறிக அலர்வாய்
அம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க
வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு
ஒண்பூ வேங்கை கமழுந்
தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே.‘‘
         (அகம்.218)
  

இஃது     இடத்துய்த்துப்    பகற்குறி   நேர்ந்த   வாய்பாட்டான்
வரைவுகடாயது.   இம்  மணிமிடைபவளத்துட்,   குறிஞ்சிக்கு  முதலுங்
கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:29:19(இந்திய நேரம்)