Primary tabs

‘‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளாவி
அறுகோட்டியானைப் பொதினியாங்கண்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றாம்
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்
நிழல்தோய்ந் துலறிய மரத்த அறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச்
சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப்ப ஆருற்
றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல காடிறந் தோரே.’’
(அகம். 1)
இது
பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது. இக் களிற்றியானை
நிரையுட், பாலைக்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற்
சிறப்பெய்தி முடிந்தது.
‘‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்றளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரு மூர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
பிறளும் ஒருத்தியை நம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லி னள்ளூ ரன்னஎம்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ.’’ (அகம். 46)
இது
வாயின் மறுத்தது. இக் களிற்றியானைநிரையுள், மருதத்திற்கு
முதலுங் கருவும்
வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.
‘வண்டூது பனிமல’ ரெனவே வைகறையும் வந்தது.
‘‘கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர
அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த