Primary tabs

வாலெனின், எல்லாத்
தெய்வத்திற்கும்
அந்தணர் அவி
கொடுக்குங்கால் அங்கி ஆதித்தன்கட்
கொடுக்குமென்பது
வேதமுடிபாகலின், ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொது வென
மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்திணை முதற்
பொருளொடு கூட்டிக் கூறியது தெய்வழிபாட்டு மரபிதுவே, ஒழிந்தது
மரபன்றென்றற்கு. எனவே, அவ்வந்நிலத்தின் தெய்வங்களே
பாலைக்குந் தெய்வமாயின.
‘உறையுலகென்றார்,
ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான்
நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றற்கு. ‘மைவரை’ எனவே
மழைவளந் தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும்
மழைவளனுந் தருமென்றற்குத் ‘தீம்புன’ லென்றார். திரைபொருது கரை
கரையாமல் எக்கர் செய்தல் கடவுட் கருத்தென்றற்குப் ‘பெருமண’
லென்றார்.
இனி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்னை?
யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின்,
கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்
செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.
எனவே, முல்லையென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று, ‘‘முல்லை
சான்ற முல்லையம் புறவின்’’ என்பவாகலின். புணர்தலின்றி இல்லறம்
நிகழாமையிற் புணர்தற் பொருட்டாகிய
குறிஞ்சியை அதன்பின்
வைத்தார். இதற்குதாரணம், ‘‘கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து’’
என்பது. புணர்ச்சிப்பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை
வைத்தார். ‘மருதஞ் சான்ற மருதத் தண்பணை’’ என்புழி,
மருதமென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தலை. பரத்தையிற்
பிரிவு போலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை
ஈற்றுக்கண்வைத்தார். நெய்தற் பறையாவது இரங்கற் பறையாகலின்
நெய்தல் இரக்கமாம்.
‘‘ஐதகலல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே’’
(புறம்.389)
என வரும்.
இனி, இவ்வாறன்றி முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன
இவ்வொழுக்கங்களெனின், அவ்வந் நிலங்கட்கு ஏனைப் பூக்களும்
உரியவாகலின் அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக்