Primary tabs

கடாயினாற்கு விடையின்மை உணர்க.
இதனானே நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும்
முறையுங் கூறினான். இந்நான்கும்
உரிப்பொருளாதல் ‘புணர்தல்
பிரிதல்’ (14) என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை
முதற்பொருளொடு கூறியது, அவை ‘வந்த நிலத்தின்
பயத்த’ வாய் (19)
மயங்குமாறு போல மயங்காது இது
வென்றற்கும், கருப்பொருளுடைத்
தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கு மென்றுணர்க.
உ-ம்:
‘‘வன்புலக் காட்டுநாட் டதுவே’’ (நற். 59)
எனவும்,
‘‘இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்...
கன்மிசைச் சிறுநெறி’’
(அகம்.128)
எனவும்,
‘‘அவ்வய னண்ணிய வளங்கே ழூரன்’’ (அகம்.26)
எனவும்,
‘‘கானலுங் கழறாது மொழியாது’’ (அகம்.170)
எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும்
உரியவாயினவாறு காண்க.
(5)
முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரி
பெரும்பொழுதும் சிறுபொழுதும்
6.
காரும்
மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
இது முதலிரண்டனுள்
நிலங் கூறிக் காலங்கூறுவான் முல்லைக்குங்
குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுங்
கூறுத னுதலிற்று.
தொ. பொ. நச்.(1)7
(இ-ள்)
காரும் மாலையும் முல்லை - பெரும்பொழுதினுட்
கார்காலமுஞ் சிறுபொழுதினுள்
அக்காலத்து மாலையும்
முல்லையெனப்படும்; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் -
பெரும் பொழுதினுட் கூதிர்காலுமுஞ் சிறுபொழுதினுள் அதன்
இடையாமமுங் குறிஞ்சி யெனப்படும் எ-று.
முதல் கரு உரிப்பொருளென்னும் மூன்று பாலுங்கொண்டு ஒரு
திணையாமென்று கூறினாரேனும், ஒரு பாலினையுந் திணையென்று
அப்பெயரானே கூறினார், வந்தான் என்பது உயர்திணை
என்றாற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு விதந்து
ஒரு பெயர் கூறாது வாளா கூறினார், அப்பெயர் உலகவழக்காய்
அப்பொருள் உணர நிற்றலின். காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய
சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக
வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை
இம்முறையானே
அறுவகைப்