Primary tabs

கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.
நோய்
இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம்
நின்று
நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக்
கொண்டு போதலும்,
மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று
சிலர்
பூசன்மாற்றத் தாம் மீட்ட
நிரையினை இன்புறுத்திக்கொண்டு
போதலும்;
உ-ம்:
‘‘புன்மேய்ந்
தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’
புற. வெ. வெட்சி.11)
‘‘கல்கெழுசீறூர்க்
கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6)
இவை கண்டோர் கூற்று.
நுவலுழித்
தோற்றம் - பாடிவீட்டுள்ளோர்
மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான நிரைகொண்டோர்
வரவும், ஊரிலுள்ளோர் கண்டு
மகிழந்துரைத்தற்குக்
காரணமான நிரைமீட்டோர் வரவும்;
உ-ம்:
‘‘மொய்யண லானிரை
முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு.’’ (புறம். வெ.
வெட்சி.12)
‘‘காட்டகஞ்
சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7)
இது கண்டோர் கூற்று.
தந்து
நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட
நிரையைத் தம்
மூர்ப்புறத்துத் தந்து
நிறுத்தலும், நிரைமீட்டோர்தாம்
மீட்ட
நிரையினைத் தந்து நிறுத்தலும்;
உ-ம்:
‘‘குளிறு
குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’
‘‘கழுவொடு
பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து.’’
இவை கண்டோர் கூற்று.
பாதீடு
- ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும்
ஒன்றாதலிற்
பாதீடாயிற்று; வேந்தனேவலாற்
றாங்கொண்ட நிரையைப்
பகுத்துக்கோடலும்,
மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும்,
நிரையை
இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்;
உ-ம்:

