Primary tabs

ய் இருபத்தெட்டாயிற்று.
இனித்
துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக்
காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவே படும்.
அவை
இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற்
பூக்கோளேவி நிரைகோடல்
குறித்தோன்
படைத்தலைவரைத் தருக வென்றலும், அவர்
வருதலும்,
அவர் வந்துழி இன்னது செய்க வென்றலும், அவர் வேந்தற்கு
உரைத்தலும், அவர் படையைக்
கூஉய் அறிவித்தலும்,
படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும்,
அவர் பகைப்புலக்
கேட்டிற்கு இரங்கி வருந்தலும்,
நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப்
பரவுக்கடன்
பூண்டலும் பிறவுமாம். களவிற்
செல்வோர்க்கும்
அரவங்கூறினார்,
அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப்
போதலின்.
அவற்றுட் சில வருமாறு:-
‘‘கடிமனைச் சீறூர்க் கருங்கட் கறவை
வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லோட்டா
னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர்
வருகமன் வாயிற் கடை.’’
இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது.
‘‘வாள்வலம்
பெற்ற வயவேந்த னேவலாற
றாள்வ லிளையவர் தாஞ்செல்லி - னாளைக்
கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா
னனைவது போலுநம் மூர்.’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1237.நிரைகோடல்.6)
இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது.
‘‘வந்த
நிரையி னிருப்பு மணியுட
னெந்தலை நின்றலை யாந்தருது - முந்துநீ
மற்றவை பெற்று வய வேந்தன் கோலோங்கக்
கொற்றவை கொற்றங் கொடு.’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1238,நிரைகோடல்.7)
இது
தெய்வத்திற்குப் பராஅயது; பிறவும்
வருவனவெல்லாம்
இதனான் அடக்குக.
இனிப்
பாக்கத்து விரிச்சிக்குக்
காரணங்களாவன; பாக்கத்துச்
சென்றுழி
இருப்புவகுத்தலும், பண்டத்தொடு
வல்சி ஏற்றிச்
சென்றோரை
விடுத்தலும், விரிச்சி வேண்டாவென
விலக்கிய
வீரக்குறிப்பும், விரிச்சிக்கு
வேண்டும் நெல்லும் மலரும் முதலியன
தருதலும், பிற
நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச்
சிறப்புச்
செய்தலும் பிறவுமாம்.
உ-ம்:
‘‘நாளும்
புள்ளுங் கேளா வூக்கமொ
டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்
செங்கால் வெட்சியுந் திணையுந் தூஉய்
மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப
விரிச்சி யோர்த்தல் வேண்டா
வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.’’
(தகடூர்யாத்திரை, புறத்திரட்டு.1241,நிரைகோடல்.10)
இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க.
அரசன்
ஏவலாற்போந்தோரும் விரிச்சி கேட்டார்,இன்ன
ஞான்று
வினைவாய்க்குமென்று அறிதற்கு.
இனி
வேய்க்குக் காரணங்களாவன; வேய்கூறினார்க்குச்
சிறப்புச்
செய்தல் போல்வன.
உ-ம்:
‘‘மாற்றருந் துப்பின்
வயவேந்த னல்லனே
யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற்
புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி
நல்வே யுரைத்தார்க்கு நாம்.’’
என வரும்.
இனி ஏனைய

