Primary tabs

டிளையோ
னிகல்வென்றான்
வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந்
தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து.’’
இது போந்தை மலைந்தாடியது.
‘‘குறும்பூழ்ப்போர்
கையெறிந்து கொற்றம் பெறுத
லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன்
குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு
தலைமலையற் பாலதூஉ மன்று.’’
இது வேம்பு தலைமலைந்தாடியது.
‘‘ஆர்வேய்ந்த
கோலத்தோ டாடுவர் பாடுவர்
போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் -
சீர்சால்
பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று
சிறைகெழு வாரணப்போர் செய்து’’
இஃது ஆர்மலைந்தாடியது.
இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க.
வாடா வள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்;
அஃது இழிந்தோர் காணுங் கூத்து.
உ-ம்:
‘‘மண்டம
ரட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமக ணோற்றாள் பெரிது’’
இது
பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப் பிற்கூறினார்,வெறியறி
சிறப்பன்மையும்
ஆண்பாற்கும் பெண்பாற்கும்
பொதுவாதல்லது
அகத்திணைக்கண் வந்து
பொதுவாகாமையும் பற்றி.
வயவர்
ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட - முன்பு கழல்
கால்
யாத்த வீரர் இளமைப்
பருவத்தானொருவன் களத்திடை ஓடாது
நின்றமை
கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய
கழனிலைக்
கூத்து.
ஓடாமையாற்
கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது
வள்ளிப்பின்
வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க.
கொடி
முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப்
பகுதியாம்.
உ-ம்:
‘‘மீளாது
பெற்ற விறற்கழலோன் வாளாட்டின்
வாளாடு கூத்திவந் தாடினாள் - வாளாட்டின்
மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப்
பெண்ணாடின் யாதாம் பிற’’
ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும் -
பிறக்கடியிடா
உடன்ற வேந்தனை உன்னமரத்துடன்
அடுக்கிக் கூறப்பட்ட உன்ன
நிலையும்;
என்றது,
வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன், ‘வேந்தற்கு நீ
வென்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வ’லெனப் பரவுதலும்,
‘எம்வேந்தற்கு
ஆக்கம் உளதெனில் அக்கோடு பொதுளக’ எனவும்
‘பகைவேந்தற்கு ஆக்கம்
உளதெனில் அக்கோடு படுவதாக’ எனவும்
நிமித்தங்கோடலும், என
விருவகைத் தெய்வத் தன்மை;அஃதுடைமை
யான் ‘அடுக்கிய உன்ன நிலையு’
மென்றார்.
உ-ம்:
‘‘துயிலின்
கூந்தற் றோளிணைப் பேதை
வெயினிழ லொ

