தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3860


ழிய வெஞ்சுரம் படர்ந்து
செய்பொருட் டிறவீ ராகிய நும்வயி
னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே
யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள்
கலுழ்கண் கரந்தனடானே யினியே
மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ
ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇத்
தலைசாய்த் திருந்த சிலைவலம் போற்றி
வேந்து வழக்கறுத்த கான
நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே’’
  

இதனுள்,  

‘‘மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ
ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇ’’
  

என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை.  

‘‘முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன்
றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக்
கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை
வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து.’’
 

இவை மறவர் செய்தலிற் றன்னுறு தொழிலாம்.  

‘‘பொன்னின் அன்ன பூவின் சிறியாலைப்
புன்கால் உள்ளத்துப் பகைவன் எங்கோ
’’       (பதிற்.6)  

என்பதும் அது.  

இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று.மன்னவன் வெற்றியே கருதாது
இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவு மாயிற்று.
  

மாயோன்  மேய   மன்பெருஞ்   சிறப்பிற்   றாவா  விழுப்புகழ்ப்
பூவைநிலையும் என்றது: மாயோன் விழுப்புகழ் - மாயனுடைய  காத்தற்
புகழையும், மேயபெருஞ்  சிறப்பிற்   றாவா  விழுப்புகழ் -ஏனோர்க்கு
உரியவாய்   மேவிய   பெரிய   தலைமையிற்   கெடாத  படைத்தல்
அழித்தலென்னும்    புகழ்களையும்;    மன்பூவைநிலையும்   மன்னர்
தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்;
  

என்றது   ஒன்றனை  ஒன்றுபோற்  கூறுந்  துறை.  ‘மன்’  எனப்
பொதுப்படக்  கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங்  குறுநில மன்னர்
முதலியோர்க்குங்  கொள்க. ‘பெருஞ்சிறப்பு’ என்றதனான் படைத்தலுங்
காத்தலும்  அழித்தலுமன்றி  அவரவர்  தாமாகக்  கூறலும்,  முருகன்
இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க.
  

உ-ம்:  

‘‘ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி

   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:52:49(இந்திய நேரம்)