தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3861


விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளுங்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலி
னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு
மரியவு முளவோ நினக்கே...................’’
       (புறம்.56)
  

என இதனுள் அங்ஙனம் உவமித்தவாறு காண்க.  

‘‘குருந்த மொசித்தஞான்றுண்டா லதனைக்
கரந்த படி யெமக்குக் காட்டாய் - மரம்பெறாப்
போர்பிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட
மார்பிற் கிடந்த மறு’’
 

இது சோழனை மாயோனாகக் கூறிற்று.  

‘‘ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு
மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா
மாற்றல்சால் வானவன் கண்’’
  

இது சேரனை அரனாகக் கூறிற்று.  

‘‘இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக்
கோழியா னென்னின் முகனொன்றே கோதையை
யாழியா னென்றுணரற் பாற்று’’
  

இது சேரனைப் பல தேவராகக் கூறிற்று.  

‘‘கோவா மலையாரங் கோத்த........’’ (சிலப். ஆய்ச். உள்வரி)

‘‘முந்நீரி னுள்புக்கு மூவாக்........’’ (சிலப். ஆய்ச். உள்வரி)

‘‘பொன்னிமயக் கோட்டுப் புலி........’’ (சிலப். ஆய்ச்.    உள்வரி)  

என்பனவும் அவை.  

‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
.........சிறுகுடி யோரே’
                      (கலி.52)
  

இஃது  உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம்
புறத்தும்   அகத்தும்   வருதலிற்  பொதுவாயிற்று.  இறப்ப  உயர்ந்த
தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று.
  

‘தாவா’   என்றதனானே  அரசர்புகழைக்   காட்டுவாழ்வோர்க்குக்
கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.
  

‘‘வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி
னாங்க ணோக்கா தாங்கு நீபோ
யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை
முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே
யஃதான்
றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு
வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே
யதனா
னதளுங் கோடு முதலிய கூட்டுண்
டிகலி னிசைமேஎந் தோன்றிப்
பலவா கியநில நீபெறு நாளே’’
  

இது  முடியுங் குடையும்  ஒழித்து அரசர்க்குரியன  கூறி இழித்துக்
கூறியும் புகழ்மிகுத்தது.
  

‘‘பல்லிதழ் மென்மலர்’’என்னும் (109) அகப்பாட்டினுள் ‘‘அறனில்
வேந்த னாளும்,வறனுறு குன்றம் பலவிலங் கினவே’’எனக் காட்டுத்
தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார்.
 

ஆர்  அமர்  ஓட்டலும் - குறுநில  மன்னருங் காட்டகத்து வாழும்
மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும்;
  

உ-ம்:  

‘‘பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற
லோச்சினன் றுரந்த கா

   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:53:01(இந்திய நேரம்)