Primary tabs

றுணர்க.
எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின்,
காஞ்சியென்பது
எப்பொருட்கும் நிலையாமை
கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும்
பொதுவியற்
பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க.
ஒருவன்
மேற்சென்றுழி ஒருவன்
எதிர்செல்லாது தன்மதிற்புறத்து
வருந்துணையும் இருப்பின், அஃது
உழிஞையின் அடங்கும். அது
சேரமான் செல்வுழித்
தகடூரிடை அதிகமான் இருந்ததாம். இங்ஙனம்
இருவரும்
வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும் துறை
பதின்மூன்றும்
இருவர்க்கும் ஒப்பக் கூறலா
மென்றுணர்க.
(7)
வஞ்சி பதின்மூன்று
துறைத்து ஆதல்
63.
வயங்க லெய்திய பெருமை யானுங்
கொடுத்த லெய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின் றுய்த்த போராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
வொருவன் றாங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சொற்று நிலையும்
வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங்
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறிப்பிற் றுறைபதின் மூன்றே.
இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்றுதுறைத் தென்கிறது.
(இ-ள்)
இயங்கு படை
அரவம் - இயங்குகின்ற
இருபடையெழுச்சியின் ஆர்ப்பரவமும்;
உ-ம்:
‘‘விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப
மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்த. னெண்ண
மொருபாற் படர்தரக்கண் டொன்னார்த முள்ள
மிருபாற் படுவ
தெவன்.’’
(பெரும்பொருள் விளக்கம்.
புறத்திரட்டு.1255 -பகைவயிற் சேறல் 4)
‘‘சிறப்புடை
மரபிற் பொருளு மின்பமும்’’ என்னும்
புறப்பாட்டும்
(31) அது.
‘‘இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்திறுத்த வியன்றானையொடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாகவேன்மிளை யுயர்த்து
வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்
காரிடி யுருமி னுரறுபு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.’’
(பதிற்றுப்.33)
இப் பதிற்றுப்பத்தும் அது.
‘‘போர்ப்படை
யார்ப்பப் பொடியா யெழுமரோ
பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்த - னூர்ப்புறத்து
நில்லாத தானை நிலனெளிய நீளிடைப்
புல்லார்மேற் செல்லும் பொழுது.’’
இஃது எதிர்செல்வோன் படையரவம்.
எரிபரந்து
எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப்
பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்;
இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.

