Primary tabs

யனவும் ‘வயங்கலெய்திய பெருமை’ப் பாற்படும்.
‘துணைவேண்டாச்
செருவென்றி’ (புறம்.16) நாடக வழக்கு; துணை
வேண்டுதல் உலகியல் வழக்கு. ‘‘நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்’’
(46) என்னும் புறப்பாட்டும் ‘‘வள்ளியோர்ப் படர்ந்து’’ (47) என்னும்
புறப்பாட்டும் முதலியன
‘துணைவஞ்சி’ என்பார்க்கு அவை
மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்டிணை
யெனப்படுமென்றுரைக்க.
இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென்றல்
வேத்தியலன்றாகலிற் பரிசிலர்க்குக்
கொடுத்தலும் படைக்கல
முதலியவற்றொடு கூறினார்.
இனிக்
கடிமரந்தடிதலுங், களிறும் மாவுந் துறைப்படிவனவற்றைக்
கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட
கொற்றத்தின்பாற்படும்.
அவை கருவூரிடைச் சேரமான் யானையை
யெறிந்தாற் போல்வன.
இனிப் புண்பட்டோரை
முன்னர்ச்செய்த படைவலங்கூறி
அரசராயினும் உழையராயினும் புகழ்வன போல்வனவுந்
தழிஞ்சிப்பாற்படும். இதனை முதுமொழிவஞ்சி என்பர்.
ஆண்டுக்
கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை
‘அழியுநர்
புறக்கொடை அயில்வா ளோச்சாக் - கழிதறு கண்மை
(புற. வெ.
வஞ்சி.20)யெனின், அஃது ஒருவன் றாங்கிய
பெருமைப்பாற்படு
மென்றுணர்க.
இச்
சூத்தரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ்வெண்
உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது.
இனி
ஏனையவற்றிற்கும் ஆன் உருபு கொடுத்து அதற்கேற்பப்
பொருள் கூறலும் ஒன்று.
உழிஞை மருதத்துப் புறனாதல்
64. உழிஞைதானே மருதத்துப் புறனே.
இஃது உழிஞைத்திணை
அகத்திணையுள் மருதத்திற்குப் புறனா
மென்கின்றது.
(இ-ள்.) உழிஞை தானே - உழிஞை யென்று
கூறப்பட்ட
புறத்திணை; மருதத்துப் புறனே - மருதமென்று கூறப்பட்ட
அகத்திணைக்குப் புறனாம் எ-று.
இருபெருவேந்தர்
தம்முண் மாறுகொண்டவழி எதிர்செலற் காற்றாது
போய் மதிலகத் திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும்
மருதத்திடத்த
தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்
திருத்தலானும், ஒருவன் வாயில்
வேண்டத் திறவாது
அடைத்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட
விரும்புதலானும், மருதம் போல இதற்கும் பெரும்பொழுது
வரைவின்மையானுஞ்,
சிறுபொழுதினும்
விடியற்காலமே
போர்செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று.
மருதநிலத்து மதிலாதல் ‘‘அகநாடு புக்கவரருப்பம் வௌவி’’
(மதுரைக்.149)யெனப் பாட்டிற் கூறியவாற் றானும், ‘‘பிணங்குகதிர்க்
கழனி நாப்ப ணேமுற், றுணங்குகல னாழியிற் றோன்று மோரெயின்,
மன்னன்’’ (புறம்.338) என்றதனானுங் ‘‘கொளற் கரிதாய்க்
கொண்டகூழ்த்தாகி யகத்தார், நிலைக்கெளிதா நீர தரண்’’ (குறள்.745)
என்

