Primary tabs

றதனானு முணர்க.
மற்று எதிர்சென்றானை வஞ்சி வேந்தன்
என்னுமெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண்
எதிர்சென்றிறுப்பரென்றலின் வஞ்சியாகாதாயிற்று.
(9)
உழிஞைத்திணையது பொது இலக்கணம்
அனைநெறி மரபிற் றாகுமென்ப.
இது
மேற்கூறிய உழிஞைத்திணையது பொதுவிலக்கணம்
உணர்த்துகின்றது.
(இ-ள்.)
முழுமுதல் அரணம் - வேற்றுவேந்தன் குலத்துக்கெல்லாம்
எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும் -
சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் கைக்கொண்டு
காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப - இரண்டு
வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ்வுழிஞைத்திணை என்று
கூறுவர் புலவர் எ-று.
முழு
அரணாவது, மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட்செய்த
அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள்
முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர்
முதலியன
உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய
பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும்
ஏனைய பிறவும் அமைந்து, எழுவுஞ் சீப்பும் முதலியவற்றான்
வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த
இயற்றப்பட்டதாம்.
இனி,
மலையரணும் நிலவரணுஞ், சென்று சூழ்ந்து நேர்தலில்லா
ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல் அடிச்சிலம்பின்
அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும்
இடமும்
பிறவெந்திரங்களும் அமைந்தனவாம். இனிக்
காட்டரணும் நீரரணும்
அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம்.
இங்ஙனம்
அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழிதோறும்
பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்சமுடைத்தாயிற்று.
சிறப்புடை
அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும்
மகப்பெறாதோனையும்
மயிர் குலைந்தோனையும்
அடிபிறக்கிட்டோனையும்
பெண்பெயரோனையும்
படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும்
பிறவும்
இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுதலுங், கூறிப் பொருதலும்
முதலியனவாம்.
இனி
‘ஆகு’மென்றதனான் எதிர்சென்றவேந்தன் பொருது தோற்றுச்
சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன்
வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க.
(10)
உழிஞை எட்டுத் துறைத்து ஆதல்
இது முற்கூறிய
முற்றலுங்
கோடலும் ஒருவன்
தொழிலன்றென்பதூஉம், முற்கூறியதுபோல ஒருதுறை
இருவர்க்கு
முரியவாகாது, ஒருவர்க்கு நான்கு
நான்காக எட்டாமென்பதூஉங்
கூறுகின்றது.
(இ-ள்.)
அதுவே தானும் - அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால்
வகைத்து. மதில்முற்றிய வேந்தன் கூறு
நான்கும் அகத்தோன்கூறு
நான்குமென எட்டு வகைத்து எ-று.
அது மேற்கூறுப. (11)
அவை எட்டுத்துறையுமாவன
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமு

