Primary tabs

புகழ்ந்தது.
மற்று
அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடைமதிலைக்
காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்
மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்,
அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை
யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;
பிற்பட்டதுறைக்குப்
புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள்
கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர்
கூறினார்.
உ-ம்:
‘‘வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா
லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
வான்றோய் புரிசை பொறியு மடங்கின
வான்றோ ரடக்கம்போ லாங்கு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.எயில்கோடல்8)
இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.
‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க
ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா
ரடிபிறக் கீடு மரிது’’
(தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7)
இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.
நீர்ச்
செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டப்
போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத்
தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த
நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்;
‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார்.
உ-ம்:
‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய்
நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல்
வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர்
நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’
இஃது இருவருக்கும் ஒக்கும்.
வேறு வேறு வருமெனினுங் காண்க.
அதா
அன்று ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற்
புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;
பாசியென்றார்,
நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும்
பொருதலின்.
உ-ம்:
‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய்
நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா
னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’
இது புறத்தோன் பாசிமறம்.
‘‘தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த
வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு
மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற்
பதுக்கையும் வேண்டாதாம் பற்று’’
இஃது அகத்தோன் பாசிமறம்.
அகமிசைக்கு இவர்ந்தோன்
பக்கமும் - புறஞ்சேரிமதிலும்
ஊரமர்மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறிநின்று
போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்;
உ-ம்:
‘‘வாயிற் கிடங்கொடு

