தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3890


வேண்டுதலிற்,    கணையும்     வேலுமன்றி    வாள்   முதலியனவும்
ஏதுவாகக்  கொள்க.   பிற்கூறியதற்கு   அட்டை அற்றுழியும் ஊருமாறு
போல்,       அலீகன்இற         அற்றுழியும்      உடம்பாடுதலின்,
அட்டையாடலெனவும் இதனைக் கூறுப.
  

இனி   மேற்றுறை       கூறுகின்றது மைந்துபொருளாக  வந்ததுஞ்
சென்றதுமாகிய    பொது    இலக்கணத்திற்கே   என்றுணர்க.   நிரை
கொள்ளப்பட்டோன்  பொருகளங்   குறித்துப்  போர்செய்தலும் அவன்
களங்குறித்தது   பொறாது  நிரைகொண்டானுங்  களங்குறித்துப்  போர்
செய்தலும்   வெட்சிப்புறத்துத் தும்பையாம்.  வஞ்சியுள்ளும் விழுப்புண்
பட்ட  வீரரை  நோக்கி  வேந்தற்குப்   பொறாமை  நிகழ்ந்து துறக்கம்
வேண்டுழி நிகழ்ந்த தும்பையும்  வஞ்சிப்புறத்துத்  தும்பையாம். முற்றப்
பட்டோனை  முற்று   விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி, அவன்
புறம்போந்து   களங்குறித்துப்   போர்செய்யக்    கருதுதலும்,  அவன்
களங்குறித்துழிப்    புறத்தோனும்    களங்குறித்துப்     போர்செய்யக்
கருதுதலும்     உழிஞைப்புறத்துத்    தும்பையாம்.    இவையெல்லாம்
மண்ணசையும்   அரண்கோடலுமின்றி  மைந்து  பொருளாகச்  சென்று
துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று.
  

மேற்காட்டுந்       துறைகளெல்லாம்       இச்சூத்திரத்துக்கூறிய இரண்டற்கு மன்றி, மைந்து பொருளாயதற்கேயா மென்றுணர்க.  

உதாரணம்:-  

‘‘நெடுவேல் பாய்ந்த மார்பின்
 
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே’’    (புறம்.297)  

‘‘எய்போற் கிடந்தானென் னேறு’’    (புறப். பொருள். 176)

என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.  

கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின்நின்ற யாக்கையாயிற்று.  

‘‘வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச்
சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல்
வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்
பாய்ந்தன மேன்மேற் பல.’’

      (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1350.அமர் 6)
 

இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை.  

‘‘பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார்
குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி
கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே
மண்ணெமதே மண்ணெமதே வென்று.’’
  

இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை.  

இது  திணைக்கெல்லாம்  பொது   அன்மையிற்   றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற்   றுறையெனவும் படாது;
 
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:58:36(இந்திய நேரம்)