Primary tabs

ஆயினுந்
துறைப்பொருள் நிகழ்ந்து
கழிந்தபிற் கூறியதாமென்
றுணர்க.
(16)
தும்பை பன்னிரு
துறைத்து ஆதல்
72.
நோனா ருட்கு மூவகை நிலையும்
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன்
தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவ னொருவனை யுடைபடை புக்குக்
கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப்
பாழி கொள்ளு மேமத் தானுங்
களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரு மொழியாத் தொகை நிலைக்கண்ணுஞ்
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன்மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
இது மைந்து
பொருளாகிய தும்பைத்திணைக்குத்
துறை
இனைத்தென்கிறது.
(இ-ள்.)
தானை யானை குதிரை என்ற நோனார்
உட்கும் மூவகை
நிலையும் - தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்று
சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்றா அரசர் தலைபனிக்கும்
மூன்று
கூறுபாட்டின்கண்ணும்;
நோனார்
உட்குவரெனவே நோன்றார் உட்காது
நிற்பாராயிற்று.
அவர் போர்கண்டு சிறப்புச்செய்யும்
தேவரும் பிணந்தின்
பெண்டிரும் படையாளர் தாயரும்
அவர் மனைவியருங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங்
கண்டோரும் பிறரு
மென்று கொள்க.
துறக்கம்புகு
வேட்கையுடைமையிற் காலாளை
முற்கூறி, அதன்
பின்னர் மதத்தாற கதஞ்சிறந்து
தானும் போர்செய்யும் யானையைக்
கூறி,
மதஞ்சிறவாமையிற்
கதஞ்சிறவாத குதிரையை அதன்பிற்
கூறினார்.
குதிரையானன்றித் தேர் தானே செல்லாமையிற்
றேர்க்கு
மறமின்றென்று அது
கூறாராயினார்.
‘நிலை’
யென்னாது ‘வகை’
யென்றதனான் அம்மூன் நிலையுந்
தாமே
மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனேவலின் தானை
பொருது
வீழ்தலும்,
யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற்
பொருதலும்,
படையாளர் ஒருவரொருவர்
நிலை கூறலும் அவர்க்கு
உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க.
இனி
தாயர் கூறுவன மூதின்முல்லையாம்; மனைவியர்

