Primary tabs

கூறுவன
இல்லாண்முல்லையாம்; கண்டோர்
கூறுவன
வல்லாண்முல்லையாம்;
பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.
இவை
கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார்.
மனம்
ஞெகிழ்ந்து போவாரு முளர். அவை ஓரொரு துறையாக
முதனூற்கண்
வழங்காமையானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும்
இவர்
தானைநிலையென அடக்கினார். இச்சிறப்பான் இதனை
முற்கூறினார்.
அத்தானை சூடிய பூக்கூறலும், அதனெழுச்சியும்,
அரவமும்,
அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக்
கண்டு இடை நின்றோர்
போரை விலக்கலும் அவர் அதற்குடம்படாமைப் போர்
துணிதலும்,
அத்தானையுள் ஒன்றற்கிரங்கலும்,
அதற்குத் தலைவரை வகுத்தலும்,
வேந்தன் சுற்றத்தாரையுந் துணை வந்த
அரசரையும் ஏத்துவனவும்,
நும்போர் எனை நாட்டு என்றலும், இரு பெருவேந்தரும்
இன்னவாறு
பொருதுமென்று
கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற்
படும்.
உ-ம்:
‘‘கார்கருதி
நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான்றுகளறுசீர்
வெப்புடைத் தானையெம் வேந்து’’ (புற. வெ. தும்பை.1)
இது பூக் கூறியது.
இதனைத் திணைப்பாட்டு மென்ப.
‘‘வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந்
தண்ணடையுங்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப
பன்மணிப் பூணான் படைக்கு.’’
(புற. வெ. தும்பை.2)
இது சிறப்புச் செய்தது.
‘‘வயிர்மேல் வளைநரல வைவேலும்
வாளுஞ்
செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - யுயிர்மேற்
பலகழியு மேனும், பரிமான்றேர் மன்னர்க்
குலகழியு மோர்த்துச் செயின்’’
(புற. வெ. தும்பை.4)
இது விலக்கவும் போர் துணிந்தது.
‘‘மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக்
கடற்றானை
யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி - னென்னாங்கொ
லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப்
பாழித்தோண் மன்னர் படை’’
(புற. வெ. தும்பை.5)
இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது.
‘‘கங்கை
சிறுவனும் காய்கதிரோன் செம்மலு
மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை
சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார்
மறுவந்தார் தத்த மனம்.’’
இது பெருந்தேவனார் பாட்டு; (புறத்திரட்டு.அமர் 10) குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது.
இனிப் போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு:
‘‘குழாக்களிற்
றரசர் குறித்தெழு கொலைக்களம்
விழாக்களம் போல மெய்ம்மலி யுவகையர்
ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின்
அழுந்துபடப் புல்லி விழுந்

