தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3909


பொறைநிலை’’  

‘‘நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
குறித்த பொருளொடு கொளுத்த னினைவே’’
  

‘‘ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு
தான்பிற னாகாத் தகையது சமாதி’’
  

என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க.  

‘பக்க’மென்றதனான்,    முட்டின்றி     முடிப்போர்   முயல்வோர்
என்பனவும்,
  

‘‘நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்

வானகத் துய்க்கும் வழி’’
             (புற.வெ.வாகை.14)

என்பனவுங் கொள்க.  

‘‘ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளி
ரிழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகுங்
கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்தீ மாட்டிப்

புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே’’.       
(புறம்.251)

எனவும்,  

‘‘வைததனையின் சொலாக் கொள்வானு நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானு - ஊறிய
கைப்பதனைக் கட்டியென்றுண்பானு மிம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்’’
         (திரிகடுகம்.48)

எனவும்.  

‘‘ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து’’
              (குறள்.126)

எனவும்,  

‘‘ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்’’
                    (குறள்.370)

எனவும்,  

‘‘நீஇ ராட னிலக்கிடை கோடல்
தோஒ லுடுத்த ஒள்ளெரி யோம்ப
லூரடை யாமை யுறுசடை புனைதல்
காட்டி லுணவு கடவுட் பூசை

யேற்ற தவத்தி னியல்பென மொழிப’’
  

எனவும் வரும். 

ஏனைய வந்துழிக் காண்க.  

அறிமரபிற்    பொருநர்கட்   பாலும்   -    தாந்தாம்   அறியும் இலக்கணங்களானே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்;  

அவை  சொல்லானும்   பாட்டானுங்     கூத்தானும்  மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் வேறலாம்.  

உ-ம்:  

‘‘விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’            
(குறள்.648)

இது சொல்வென்றி. 

‘‘வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா
ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து’’
      (புறப். வெ. ஒழிபு.18)

இது பாடல்வென்றி. 

‘‘கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந்
தொடுகழன் மன்னன் றுடி.’’
        (புறப். வெ. ஒழிபு. 17)

இஃது ஆடல்வென்றி.  

‘‘இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்
மைந் துடை மல்லன் மதவலி முருக்கி
யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப் பணை

 
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:02:15(இந்திய நேரம்)