தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3910


முயலும் யானை போல
விருதலை யொசிய வெற்றிக்

களம்புகு மள்ளற் கடந்தடு நிலையே’’
          (புறம்.80)

இது மல்வென்றி,  

‘‘கழகத் தியலுங் கவற்றி னிலையு
மழகத் திருநுதலா ளாய்ந்து - புழகத்துப்
பாய வகையாற் பணிதம் பலவென்றா
ளாய வகையு மறிந்து’’            
(புற. வெ. ஒழிபு. 16)

இது சூதுவென்றி,  

அனைநிலை     வகையோடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை
பெற்றது   என்மனார்   புலவர்   -   அக்கூறுபட்ட   ஆறுபகுதியும்
நிலைக்களமாக  அவற்றுக்கண்  தோன்றிய வேறுபட்ட கூறுபாட்டோடு
முன்னைய  ஆறுங்  கூட்டி  அவ்வெழுகூற்றான்  துறை பல திரண்ட
தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் எ-று.
  

அனையென்றது     சுட்டு. நிலை - நிலைக்களம். நிலையது வகை.
ஆங்கென்றதனை  ‘அனைநிலைவகையோ’  டென்பதன்கண் வகைக்கு
முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச் சொல்லாதலின் முன் னெண்ணிய
வற்றொடு கூட்டி ஏழாயிற்று.
  

இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக்
கன்னியிடத்துக்  கற்புநிகழ்வதற்கு  முன்னே களவில் தோன்றினானும்,
அவள்  பிறர்க்குரியளாகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள்
கணவனை   இழந்திருந்துழித்   தோன்றினானும்,   ஒழிந்த  மூவகை
வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும், அவரவர்
மக்கட்கண்   அவ்வாறே   பிறழத்  தோன்றினாருமாகிய  சாதிகளாம்.
இன்னோருந்   தத்தந்  தொழில்வகையாற்  பாகுடப  மிகுதிப்படுத்தல்
வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும்
பெண்பாலுயர்ந்து    ஆண்   பாலிழிந்தவழிப்   பிறந்த   சாதிகளும்
அனைநிலைவகைப் பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு
முணர்ந்த    மாமூலர்    முதலியோர்    அறிவன்றேயத்து   அனை
நிலைவகையோராவர்;  அவர்க்கு   மாணாக்கராகித்  தவஞ்செய்வோர்
தாபதப்பக்கத்தாராவர்.    தகர்வென்றி   பூழ்வென்றி   கோழிவென்றி
முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனைநிலைவகையாம்.
  

ஒரு     வரையறைப்படாது  பலதுறைப்படுவனவற்றை  யெல்லாந்
தொகைநிலையெனத்    தொகுத்து   ஒரோவொன்றாக்கிக்   கூறினார்;
தொகுத்துக்   கூறலென்னும்   உத்திவகையான்.   பார்ப்பன   வாகை
அரசவாகையென்றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன்றக்
கூறலாமாதலின் இங்ஙனமோதினார். காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள்
வந்துழி வந்து
 
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:02:29(இந்திய நேரம்)