தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3934


யாயினும்    பதின்    துலாம்    பொன்    பரிசில்   பெற்றமையிற்
பாடாணாயிற்று.
  

‘‘பார்ப்பார்க் கல்லது பணியறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினுங்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி
யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயு
நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற்
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி
னடையடுப் பறியா அருவீ யாம்ப
லாயிர வெள்ள வூழி
வாழி யாத வாழிய பலவே’’
             (பதிற்றுப்.63)
  

இது வாகைத் துறைப் பாடாண்பாட்டு.  

இப்   பதிற்றுப்பத்து    நூறும்இவ்வாறே    வருதலிற்  பாடாண்
டிணையேயாயிற்று.   புறத்துள்ளும்  இவ்வாறு  வருவனவும்  உணர்க.
                                                     (25)
  

ஒன்றன்பகுதியுள் தேவர்பகுதி தோன்றுமாறு
 

79.

அமரர்கண் முடியு மறுவகை யானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி யொன்று மென்ப.
 

இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத்
தன்  பொருட்பகுதிகள்  எல்லாங்  கூடி ஒன்றாமென்ற பாடாண்டிணை
தேவரும்    மக்களுமென    இருதிறத்தார்க்கே    உரிய    என்பார்
அவ்விரண்டினுள் தேவர்பகுதி இவையென்ப துணர்த்துகின்றது.

(இ-ள்.)     அமரர்கண்   முடியும்  அறுவகையானும்  -  பிறப்பு
வகையானன்றிச்     சிறப்புவகையான்     தேவர்கண்ணே     வந்து
முடிதலுடையவாகிய  அறுமுறை  வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம்
புல்லிய    வகையினும்   -   அத்தேவரிடத்தே   உயர்ச்சி   நீங்கிய
பொருள்களை   வேண்டுங்  குறிப்புப்  பொருந்தின  பகுதிக்கண்ணும்;
ஒன்றன்  பகுதி  ஒன்றும் என்ப - மேற்பாடாண் பகுதியெனப் பகுத்து
வாங்கிக்கொண்ட   ஒன்றனுள்   தேவரும்   மக்களுமெனப்   பகுத்த
இரண்டனுள்    தேவர்க்கு    உரித்தாம்   பகுதியெல்லாந்   தொக்கு
ஒருங்குவருமென்று கூறுவார்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:07:09(இந்திய நேரம்)