தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3938


தொகுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே’’
    (பதிற்றுப்.14)

பரவற்கண் வந்த     செந்துறைப்    பாடாண்பாட்டு;    இதனை
வாழ்த்தியலென்பர்.

‘‘வரைபுரையு மழகளிற்றின்மிசை
வான்றுடைக்கும் வகையபோல
விரவுருவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
நீ, யுடன்று நோக்கும்வா யெரிதவழ
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த
வெம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோருஞ்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங்
கடவ தன்மையிற் கையற வுடைத்தென
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசில
ரொன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே’’
   (புறம்.38)

இது புகழ்ச்சிக்கண்     வந்த    செந்துறைப்    பாடாண்பாட்டு.
இயைபியன்மொழி யென்பதும் அது.

‘‘உண்டா லம்மலிவ் வுலக மிந்திர
ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி
னுலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்வில
ரன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே’’
       (புறம்.182)

இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப்
பாடாண்பாட்டு.

இது     முனிவர் கூறுமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங்
கூறாது  மறுமைப்பயன்  பிறர்க்குறுதி  பயப்பக் கூறலிற் கைக்கிளைப்
புறனாய்ப் பாடாணாயிற்று.

இவை   செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி
வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்
குரியவாகி வருமென்பதூஉங்  கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக்
கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ங
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:07:57(இந்திய நேரம்)