Primary tabs

னிருப்பப்- படுமுத்தம்
புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க்
கென்ன முறைய ளிவள்’’
என வரும்.
‘‘களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான் - றெளியாதே
செங்காந்தண் மெல்லிரலாற் சேக்கை தடவந்தே
னென்காண்பே னென்னலால் யான்’’
(முத்தொள்.63)
‘‘அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயே யெம்பெருமா னென்று - கணியார்வாய்க்
கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமானார்
தோணலஞ் சேர்தற் பொருட்டு’’
என வரும்.
‘‘அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
யடுதோண்முயங்க லவைநா ணுவலே
யென்போற் பெருவிதுப் புறுக வென்று
மொருபாற் படாஅ தாகி
யிருபாற் பட்டவிம் மைய லூரே’’
(புறம்.83)
இது
பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி ஒத்த அன்பினாற் காம
முறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது,
இதனானடக்குக.
இன்னும் ‘ஏனோர் பாங்கினும்’ என்பதனானே கிளவித்தலைவ
னல்லாத பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவுங்
கொள்க.
உ-ம்:
‘‘கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்’’ (கலி.67)
இது
குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித்
தலைவனாகக்
கூறியது.
‘‘மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர்கூட னெடுங்கொடி யெழவே’’
(கலி.31)
என்பதும் அது.
இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (28)
மக்கள் குழவிக்கண்ணும் புரைதீர்காமம் உரித்தாதல்
இது
முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் ‘புரைதீர்
காம’த் (தொல். புறம். 26) திற்குப் புறனடை கூறுகின்றது.
(இ-ள்)
குழவிமருங்கினும் கிழவதாகும் - குழவிப் பருவத்துங்
காமப்பகுதி உரியதாகும். எ-று.
‘மருங்கெ’ன்றதனான்
மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க;
தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு
கூறினார். தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக்
கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுஞ்
தாலுஞ் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ்
சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறு பறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு
மென்பது.
இப்பகுதிகளெல்லாம் ‘வழக்கொடு

