Primary tabs

இச்சூத்திரம் மக்கட்கெய்திய
பொருண்மையை மீட்டுங்கூறி
நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை
ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக் குரியராகி
இடைபுகுந்த தேவர்க் காகாவென விதிவகையான் விலக்கியதாம்.
ஆகவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூஉங்
கூறினாராயிற்று.
கொடிநிலை
முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை
அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க.
உ-ம்:
‘‘மாவாடியபுலம் நாஞ்சிலாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீ, யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே’’
(பதிற்றுப்.25)
இது புலவன்
பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்றவள்ளை.
‘வல்லாராயினும் வல்லுந ராயினும்’ (57) ‘காலனுங் காலம்’ (41) என்னும்
புறப்பாட்டுக்களும் அது.
மக்கட் பாடாண்டிணைக்குரிய துறைகளாவன
அடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானுங்
கண்படை கண்ணிய கண்படை நிலையுங்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலி னோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉவும்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங்
கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத்
தொக்க நான்கு முளவென மொழிப.
இது
முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட்
பாடாண்டிணைக் குரிய துறை கூறுகின்றது.
(இ-ள்)
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் - பிறர்க்கு
ஈவோரைப் பிறரி னுயர்த்துக் கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக்
கூறலும்;
சான்றோர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்க த

