Primary tabs

பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி
கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’
இது சிறைவிடுதல் கூறிற்று.
‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்’’
(முத்தொள்.39)
இது செருவொழிந்தது.
‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான்
வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு
காம நுகருமின் கண்படுமி னென்னுமே
யேம முரசின் குரல்’’
இதனுள்
இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர்
கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே
பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை
யுணர்க.
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய
மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்;
இதனைப் பிறந்தநாளின்
பின்வைத்தார், பொன்முடி புனைந்த
ஞான்று தொடங்கி யாண்டுதோறும்
இது வருமென்றற்கு. குறுநில
மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும்
கொள்க.
உ-ம்:
‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த
வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன்
மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே
லந்தரத்துக் கங்கை யனைத்து’’
என வரும்.
இதனானே
யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும்
நாண்மங்கலமும் பெறுதும்.
நடைமிகுத்து
ஏத்திய குடைநிழன் மரபும் - உலக வொழுக்கத்தை
இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;
இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை?
அந்நிழல்
உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடி
புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன்
குறிக்கவும் படுதலின்.
மரபென்றதனாற்
செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப்
புனைந்துரையாக்கலுங் கொள்க.
உ-ம்:
‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும்
முற்றுநீர் வைய

