தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3964


கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே’’
        (புறம்.163)

இது மனைவிக்குக் கூறியது.

நாளும்     புள்ளும்  பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும்
எச்சமின்றிக்  காலங்கண்ணிய  ஓம்படை  உளப்பட  -  நாணிமித்தத்
தானும்       புண்ணிமித்தத்தானும்        பிறவற்றினிமித்தத்தானும்
பாடாண்டலைவர்க்குத்  தோன்றிய  தீங்குகண்டு  அஞ்சிய  அச்சமும்
அது  பிறத்தற்குக்  காரணமாகிய  அன்பும்  ஒழிவின்றிப் பரிசிலர்க்கு
நிகழ்தலின்   அவர்   தலைவர்   உயர்வாழும்  காலத்தைக்  கருதிய
பாதுகாவன் முற் கூறியவற்றோடே கூட.

ஒருவன்     பிறந்த நாள்வயின் ஏனைநாள்பற்றிப் பொருந்தாமை
பிறத்தலும்,  அவன்  பிறந்த  நாண்மீனிடைக்  கோண்மீன் கூடியவழி
அவன்   நாண்மீனிடைத்   தீது  பிறத்தலும்,  வீழ்மீன்  தீண்டியவழி
அதன்கண்   ஒரு   வேறுபாடு  பிறத்தலும்  போல்வன  நாளின்கண்
தோன்றிய   நிமித்தம்.  ‘‘புதுப்புள்  வருதலும்  பழம்புட்  போதலும்’’
(புறம்.20)  பொழுதன்றிக்  கூகை  குழறலும்  போல்வன புள்ளின்கண்
தோன்றிய   நிமித்தம்;   ஓர்த்து  நின்றுழிக்  கேட்ட  வாய்ப்புள்ளும்
ஓரிக்குர லுள்ளிட்டனவுங், கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர்
மண்டிலத்துக்  கவந்தம்  வீழ்தலும்  அதன்கண்  துளைதோன்றுதலுந்
தண்சுடர்  மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண்
தோன்றிய நிமித்தம்.

உவமை     - அன்பு.  இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு
நிகழ்த்தினான்  ஒரு  பாடாண்டலைவனது  வாழ்க்கை நாளிற்கு ஏதம்
வருங்கொலென்று  அஞ்சி  அவற்குத்  தீங்கின்றாகவென்று  ஓம்படை
கூறுதலின்  அது  ‘காலங்கண்ணிய  ஓம்படை’ யாயிற்று. எஞ்ஞான்றுந்
தன்  சுற்றத்து  இடும்பை  தீர்த்தானொருவற்கு இன்னாங்கு வந்துழிக்
கூறுதலின்,   இற்றைஞான்று   பரிசிலின்றேனும்   முன்னர்ப்  பெற்ற
பரிசிலை  நினைந்து  கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று.
இவன்  இறத்தலான்  உலகுபடுந்  துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த
புகழுங் கூறிற்று.

‘‘நெல்லரியு மிருந்தொழுவர்’’ என்னும்(24) புறப்பாட்டினுள் ‘‘நின்று
நிலைஇயர்நின்  னாண்மீன்’’  என அவனாளிற்கு முற்கூறிய வாற்றான்
ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது.

உ-ம்;

‘‘ஆடிய வழற்குட்டத்
தாரிரு ளரையிரவின்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனி யுயரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெ திரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:12:59(இந்திய நேரம்)