Primary tabs

முல்லை.
‘‘கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி
யிளைய ரேவ வியங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குங் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே.’’
இது வந்தாரென் றாற்றுவித்தது. இது முதலுங்
கருவு மின்றி வந்த
முல்லை.
‘‘நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த
தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு.’’
(திணைமாலை.1)
இது மதியும்படுத்தது, இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி.
‘‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.’’
இஃது இளையள் விளைவிலள் என்றது. முதலுங் கருவு மின்றி வந்த
குறிஞ்சி. இது நாணநாட்டம்
‘‘நாளு நாளு மாள்வினை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோருக் கில்லையாற் புகழென
வொண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே’’
(சிற்றெட்டகம்)
இது வற்புறுத்தாற்றியது. இஃது உரிப்பொருளொன்றுமே வந்த
பாலை.
‘‘பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மாகி
யின்னும் பாண னெம்வயி னானே.’’
இது வாயின் மறுத்தது. இஃது உரிப்பொருளொன்றுமே
வந்த
மருதம்.
‘‘அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசூல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே.’’
இது கழிபடர் கிளவி. இது பேரானும்
உரிப்பொருளானும்
நெய்தலாயிற்று.
இங்ஙனம் கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட்பயனின்றென்பது
பெற்றாம்.
இதனானே முதல் கரு வுரிப்பொருள் கொண்டே வருவது
திணையாயிற்று. இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கண மாதலின்
இயற்கையாம். அல்லாத சிறுபான்மை வழக்கினைச் செயற்கையென
மேற்பகுப்பர்.
முதல் இன்னது
எண்பதும் அதன் பகுப்பும்