Primary tabs

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.
இது
நிறுத்தமுறையானே முதல் உணர்த்துவான் அதன் பகுதியும்
அவற்றுட் சிறப்புடையனவும் கூறுகின்றது.
(இ-ள்)
முதல் எனப்படுவது- முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது;
நிலம் பொழுது இரண்டன் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும்
என்னும் இரண்டனது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று
கூறுப: இயல்புணர்ந்தோரே - இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த
ஆசிரியர் எ-று.
‘இயற்கை’
யெனவே, செயற்கை நிலனுங் செயற்கைப் பொழுதும்
உளவாயின. மேற் ‘பாத்திய’ (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம்.
ஐந்திணைக்கு
வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை
நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும்.
‘முதல்
இயற்கைய’ வென்றதனாற் கருப்பொருளும் உரிப்பொருளும்
இயற்கையுஞ் செயற்கையுமாகிய சிறப்புஞ் சிறப்பின்மையும்
உடையவாய்ச் சிறுவரவின வென மயக்கவகையாற் கூறுமாறு மேலே
கொள்க.
இனி நிலத்தொடு காலத்தினையும் ‘முதல்’ என்றலின், காலம்
பெற்று நிலம் பெறாத பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து
நிகழும் கருப்பொருளும் கொள்க. அது முன்னர்க் காட்டிய
உதாரணத்துட் காண்க.
நிலப்பகுப்பு ஆவன
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
இது ‘நடுவணது’
(2) ஒழிந்த நான்கானும் அவ் ‘வைய’ த்தைப்
பகுக்கின்றது.
(இ-ள்)
மாயோன் மேய காடு உறை உலகமும்,சேயோன் மேய மை
வரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய
பெரு மணல் உலகமும் - கடல் வண்ணன் காதலித்த காடுறை
யுலகமுஞ், செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய
வரைசூழுலகமும், இந்திரன் காதலித்த தண்புன
னாடுங், கருங்கடற்
கடவுள் காதலித்த நெடுங் கோட்டெக்கர் நிலனும்; முல்லை குறிஞ்சி
மருதம்
நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
-
முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென ஒழுக்கங் கூறிய முறையானே
சொல்லவும்படும் எ-று.
இந்நான்கு
பெயரும் எண்ணும்மையொடு நின்று எழுவாயாகிச்
சொல்லவும்