தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4890


படும்  என்னும் தொழிற்பயனிலை கொண்டன. என்றது, இவ்வொழுக்க
நான்கானும்   அந்நான்கு நிலத்தையும்   நிரனிறை வகையாற்  பெயர்
கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று.

உம்மை     எதிர்மறையாகலின்,   இம்முறையன்றிச்  சொல்லவும்
படுமென்பது      பொருளாயிற்று.      அது      தொகைகளினுங்
கீழ்க்கணக்குக்களினும் இம்முறை  மயங்கிவரக்  கோத்தவாறு  காண்க.
முல்லை     நிலத்துக் கோவலர், பல்லா பயன்  தருதற்கு ‘மாயோன்
ஆகுதி   பயக்கும்  ஆபல  காக்க’வெனக் குரவை  தழீஇ  மடைபல
கொடுத்தலின், ஆண்டு அவன் வெளிப்படுமென்றார்.

உ-ம்:

‘‘அரைசுபடக் கடந்தட்டு’’ என்னு முல்லைக் கலியுட்

‘‘பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய
ஆடுகொ ணேமியாற் பரவுதும்’’
             (கலி.105)

என வரும்,

‘‘படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்.’’               (கலி.109)

என     அவன்  மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல்
‘அவ்வகை   பிறவுங்   கருவென  மொழிப’   (18)  என்புழி  வகை
யென்றதனாற் கொள்க.

இனிக் குறிஞ்சி நிலத்துக்குறவர் முதலயோர் குழீஇ வெறியயர்தற்கு
வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்ப வாகலின்,ஆண்டு முருகன்
வெளிப்படுமென்றார்.

அஃது, ‘‘அணங்குடை நெடுவரை’’ என்னும் அகப் பாட்டினுட்,

‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள்.’’       (அகம்.22)

எனவரும். ‘‘சூரா மகளிரொ டுற்ற சூளே’’(குறுந்.53) என்புழிச் சூரர
மகளிர் அதன் வகை.

இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்குமருத நிலத்துத்
தெய்வமாக ‘‘ஆடலும் பாடலு மூடலுமுணர்தலும்’’உள்ளிட்ட இன்ப
விளையாட்டு  இனிதினுகரும்  இமையோர்க்கும்  இன்குரலெழிலிக்கும்
இறைவனாகிய     இந்திரனை     ஆண்டையோர்    விழவுசெய்து
அழைத்தலின், அவன் வெளிப்படு மென்றார்.

அது,

‘‘வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு’’             (கலி.98)

என, இந்திரனைத் தெய்வ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:09:50(இந்திய நேரம்)