Primary tabs

பொருள் பின்பு அன்பிற்குப் பெருக்கந் தருமாதலானும், இந்நான்கும்
பொருள்செய்தற்கு வேண்டுமென மறுக்க. இவ்வெட்டற்குந் தலைவன்
கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கண்டுகொள்க.
‘‘ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே’’
(குறுந்.63)
இக் குறந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக் கூறியவாறு
காண்க. பகுதியென்றதனானே, தலைவன் பிரிவலெனக் கூறுவனவும்
பிறவுங் கொள்க.
‘‘இன்றே சென்று வருதும் நாளைக்
குன்றிழி யருவியின் வெண்டேர்முடுக
இளம்பிறையன்ன விளங்கு சுடர்நேமி
விசும்புவீசுக் கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
காலியற் செலவீன் மாலையெய்திச்
சின்னிரை வாள்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணத்துவக்குவமே’’
(குறுந்.189)
எனவரும். இது குறுந்தொகை.
இவை வணிகர்க்கே உரியன.
இனித் தலைவன் கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கொண்டு
கூறுவன
பெரும்பான்மை. அவையெல்லாம் ‘நிகழ்ந்து கூறி நிலையலுந்
திணையே’ (44)
என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும்.
வாயினுங் கையினும்
வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு
திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்
திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய
ஒரு கூற்றின்
கண்ணும்;
என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு
மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன
உளவேற் கொள்க.
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப்
பொதுச்சொற் பொறுத்தல் (புறம்.8) அரசியலன்றாதலிற் றமக்கேற்ற
புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிது
மெனத்
தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தூது இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது
குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு
இடையிட்ட பிரிதற்
பகுதிக்கண்ணும்:
ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று.
‘வகை’யென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந்
தூது சிறந்ததென்றற்கும், குறுநிலமன்னர்க்குப் பெரும் பான்மை
யென்றற்கும்,
வேந்தர்தம்மின்
இழிந்தாருழைத் தூதுசேறல்
உரித்தன்றென்றற்கும்.
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
ஆகித் தோ

