Primary tabs

நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச்
சேறற்கண்ணும்;
இதற்கு ‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84)
என்பதூஉம்
‘‘இருபெரு வேந்தர்
மாறுகொள்’’ (அகம்.174) என்பதூஉம் முன்னர்க்
காட்டினாம். (சூ.24.உரை)
அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.
மூன்றன் பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி
அப்பொருளாற்
காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் -
அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின்
அருமை கூறிப்
பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற
புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப்
பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
‘தோன்றல்
சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின்
மிக்காரெனக்
கேட்டுழி அழுக்காறு
தோன்றலின், அதுவும்
பிரிதற்கு
ஏதுவாமென்றுணர்க. இஃது
அரசர்க்கே யுரித்து.
பாசறைப்
புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு
வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம்
வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத்
தனிமை கூறும்
இடத்தும்;
இதனைக் ‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ்
சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவி
நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக்
கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது
கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று
பொருளாமென்றுணர்க.
முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும்
-வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட
வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு
விரும்பிக் கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு
வினைத்திறத்திடத்தும்;
என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை.
காவற்பாங்கின்
பக்கமும் - வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய
பகுதிகளின்
கூற்றிற் பிரியுமிடத்தும்;
பகுதி ஆகுபெயர்;
அவையானை குதிரை முதலியவற்றைக்
காத்தலும்,
அரசர்க்குத் தருமமாகிய வேட்டை

