தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5048


பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க.

உ-ம்:

‘‘ஆதி சான்ற மேதகு வேட்கையி
னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின்
மதியமு ஞாயிறும் பொருவன போல
வொருத்தி வேட்கையி னுடன்வயிற்றிருவர்
செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு
மரவணி கொடி யோற் கிளையோன் சிறுவனும்
பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு
முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா
ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படைவழங்கி
யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித்
தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை
நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந்
தும்பியடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு
கொடிகொடி பிணங்கி வீழ்வன போல
வொருவயின் வீழ்ந்தடு காலை
யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.’’

இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க.

இனித்  தலைவரேயன்றிப்  பிறரும்  அவ்வாறு பொரினும் அதன்பாற்
படுத்துக.

உடைபடை  ஒருவன் புக்கு ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும்
-  தனது  உடைந்த  படைக்கண்ணே  ஒரு படைத்தலைவன் சென்று
நின்று   அங்ஙனங்  கெடுத்த  மாற்று  வேந்தன்  படைத்தலைவனை
அவன்  எதிர்கொண்டுநின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச்
சிறக்கணித்து நிற்கு நிலைமைக்கண்ணும்;

ஒருவ னொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.

உ-ம்:

‘‘சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்
வேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன் - மாற்றான்
படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத்
திடைவருங்காற் பின்வருவார் யார்’’

என வரும்.

படையறுத்துப்     பாழிகொள்ளும் ஏமத்தானும் - கைப் படையைப்
போக்கி மெய்யாற் போர்ச்செய்யும் மயக்கத்தின் கண்ணும். பாழி, வலி;
இஃது ஆகுபெயர்.

உ-ம்:

‘‘கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து
மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண்
டாறாத போர்மலைந்தான் ஆங்கரசர் கண்டார்த்தா
ரேறாட லாய ரென’’                        (பாரதம்)

என்னும் பாரதப்பாட்டுக் கொள்க.

‘‘நீலக் கச்சைப் பூந்துவ ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னல
ரெஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே’’     (புறம்.274)

என்பதும் அது.

களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும்  -  மாற்றுவேந்தன்  ஊர்ந்து வந்த
களிற்றை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:40:32(இந்திய நேரம்)