தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5049


க்     கையெறிந்தானுங்     கடுக்கொண்டெதிர்ந்தானும்     விலக்கி
அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக்கண்ணும்;

உ-ம்:

‘‘இடியா னிருண்முகிலு மேறுண்ணு மென்னும்
படியாற் பகடொன்று மீட்டு - வடிவே
லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண்
டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.’’

என வரும்.

‘‘வானவர் போரிற் றானவர்க் கடந்த
மான வேந்தன் யானையிற் தனாஅது
பல்படை நெரிவ தொல்லான் வீமன்
பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத்
தானெதிர் மலைந்த காலை யாங்கதன்
கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து
போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு
மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு
வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன்
பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே.’’

இப் பாரதப்பாட்டும் இதன்பாற்படும்.

இது  களிறெறிந்தான்    பெருமை   கூறுதலின்   யானைநிலையுள்
அடங்காதாயிற்று.

களிற்றொடு   பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும்
அமலையும்.   அங்ஙனம்   நின்று  களிற்றொடு  பட்ட  வேந்தனைக்
கொன்ற   வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து நின்று
ஆடுந் திரட்சிக்கண்ணும்;

அமலும்     நெருங்குதலாதலின்,     அமலை     யென்பதூஉம்
அப்பொருட்டாயிற்று.

உ-ம்:

‘‘ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம்
கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி
யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச்
சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து’’

என வரும்.

‘‘நான்மருப் பில்லாக் கானவில் யானை
வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு
மாமுது மதுரை மணிநிறப் பாகனோ
டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு
மைத்துனன் பணியின் வலமுறை வந்து
கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந்
திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு
மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது
வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச்
சூர்மருங் கறுத்த நெடுவேள் போல
மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய
வாளுகு களத்து வாள்பல வீசி
யொன்னா மன்னரு மாடினர் துவன்றி
யின்னா வின்ப மெய்தித்
தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே.’’

இப் பாரதப்பாட்டும் அது.

வாள்   வாய்த்து  இருபெரு  வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும்
ஒழியாத்    தொகைநிலைக்கண்ணும்    -    இருபெருவேந்தர்தாமும்
அவர்க்குத்  துணையாகிய  வேந்தருந்  தானைத்தலைவருந் தானையும்
வாட்டொழின்   முற்றி   ஒருவரும்   ஒழியாமற்   களத்து   வீழ்ந்த
தொகைநிலைக்கண்ணும்;

உ-ம்:

‘‘வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண்டொழிந்த மை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:40:43(இந்திய நேரம்)