தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5106


யோர்  அவர்க்குக்  கண்டுயில்கோடலைக்  கருதிக்  கூறிய  கண்படை
நிலையும்;

‘கண்படை கண்ணிய’    என்றார்,    கண்படை   முடிபொருளாக
இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு.

உ-ம்:

‘‘வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின்
னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர்
களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே
யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப
வறிது துயில் கோடல் வேண்டுநின்
பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே’’

என வரும்.

கபிலை கண்ணிய  வேள்வி  நிலையும் - சேதாவினைக் கொடுக்கக்
கருதிய கொடைநிலை கூறுதலும்;

இது     வரையா   ஈகையன்றி   இன்னலுற்றாற்  கொடுக்கவென
உயர்ந்தோர்   கூறு   நாட்காலையிலே  கொடுப்பதாமாதலின்  வேறு
கூறினார்.    ‘கண்ணிய’    என்றதனாற்   கன்னியர்   முதலோரைக்
கொடுத்தலுங் கொள்கை.

‘‘பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந்
தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் சென்னிதன்
மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த்
தானுலக மண்ணுலகா மன்று’’

வேலின்     ஓக்கிய விளக்கு நிலையும்  - வேலும் வேற்றலையும்
விலங்காதோங்கியவாறு    போலக்   கோலொடு  விளக்கும்   ஒன்று
பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும்.

இன்:    உவமப்பொருள். இது கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை
நாளின்  ஏற்றிய  விளக்குக்  கீழும்மேலும்  வலமுமிடமுந்  திரிபரந்து
சுடர்ஓங்கிக்     கொழுந்துவிட்டெழுந்ததென்று     அறவோராக்கங்
கூறப்படுவதாம்.

உ-ம்:

‘‘மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச்
செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்
வேலினுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக்
கோலினுங் கோடா கொழுந்து’’

என வரும்.

வேலின் வெற்றியை   நோக்கிநின்ற விளக்கநிலையெனப்  பொருள்
கூறி,

‘‘வளிதுரந்தக் கண்ணும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:51:52(இந்திய நேரம்)