தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5107


வலந்திரியாப் பொங்கி
யொளிசிறந் தோங்கி வரலா - லளிசிறந்து
நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு’’
                      
(புறப்.வெ.மாலை.பாடாண்.12)

என்பது   காட்டுவாரும்  உளர்.  அவர்  இதனை  நித்தம்  இடுகின்ற
விளக்கென்பர்.

வாயுறை      வாழ்த்தும்      -     ‘வாயுறை     வாழ்த்தே....
வேம்புங்கடுவும்’ என்னும்   (111)   செய்யுளியற்   சூத்திரப்பொருளை
உரைக்க.

இதற்கு    ஒரு  தலைவன்  வேண்டானாயினும்  அவற்கு  உறுதி
பயத்தலைச்  சான்றோர்  வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை
வாழ்ச்சிப்படுத்தலின்  இதுவுங்  கைக்கிளைப்புறனாகிய பாடாணாயிற்று.
செவியுறைக்கும் இஃதொக்கும்.

உ-ம்:

‘‘எருமை யன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கம் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங்கொள் பவரோ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’’     (புறம்.5)

இதனுள்  நிரயங் கொள்வாரோ டொன்றாது காவலை யோம் பென
வேம்புங்  கடுவும்போல  வெய்தாகக்  கூறி அவற்கு உறுதி பயத்தலின்
வாயுறை வாழ்த்தாயிற்று.

‘‘காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடைவேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே’’         (புறம்.184)

என்னும் புறப்பாட்டும் அது.

தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும்,
அகத்தியமுந்  தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர்
சூத்திரப் பொருளாகத்  துறைகூறவேண்டு  மென்றுணர்க. ‘செவியுறை
தானே’
(தொல்.  பொ.  செ.  114)  என்னும்  சூத்திரப் பொருண்மை
இவ்வுதாரணங்கட்கு இன்மை உணர்க.

செவியறிவுறூஉவும் - இதற்குச்   ‘செவியுறை   தானே’  என்னும்
செய்யுளியற் (114) சூத்திரப் பொருளை உரைக்க.

ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவுங் கூறு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:52:03(இந்திய நேரம்)