தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5108


மாறு போல, உறுவும் உறூஉதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும்.

உ-ம்:

‘‘அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர்
தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டன் முறை’’
                       
(புற.வெ.மாலை.பாடாண்.33)

‘‘வடாஅது, பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ
துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது,
கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது
தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங் கீழது,
முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டி
னீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானாது
உருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
யிறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுட
ரொண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே’’          (புறம்.6)

இதனுள்     இயல்பாகிய  குணங்கூறி அவற்றொடு செவியுறையுங்
கூறினார்,  செவியுறைப்  பொருள்  சிறப்புடைத்தென்று அவன் கருதி
வாழ்தல் வேண்டி.

ஆவயின்   வரூஉம்   புறநிலை   வாழ்த்தும் - தெய்வ வழிபாடு
உடைத்தாயினும் மக்கள் கண்ணதே
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:52:15(இந்திய நேரம்)