தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5110


தியைத்     துறந்ததனான்   துறந்த   பெண்பாற் கைக்கிளையாதலின்
திரிபுடைத்தாயிற்று.   இது   முதனிலைக்   காலத்துத்  தான்குறித்தது
முடித்துப்    பின்னர்    அவளை   வருத்தஞ்செய்து   இன்பமின்றி
யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று.

உ-ம்:

‘‘அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப
வினைத லானா ளாக விளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதனம் வினவக் காந்தண்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
யெம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே’’             (புறம். 144)

இது   கண்ணகி காரணமாக வையாவிக்கோப்  பெரும்  பேகனைப்
பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு.

‘கிளையை     மன்னெங்    கேள்வெய்   யோற்கென’   வினவ,
‘யாங்கிளையல்லேம்  முல்லை வேலி  நல்லூர்க்கண்ணே  வருமென்று
சொல்வாரெனக்   கூறுதலின்,   அஃது   ஏனைக்   கைக்கிளைகளின்
வேறாயிற்று.

‘கன்முழை யருவி’ என்னும் (147) புறப்பாட்டும் அது.

தொக்க    நான்கும் உள என மொழிப - அந்நான்கும் முற்கூறிய
ஆறனோடே தொக்குப்  பத்தாய்ப் பாடாண்பகுதிக்கண்ணே உளவாய்
வருமென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘தொக்க நான்’ கென்றதனான் இந்நான்கும் வெண்பா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:52:38(இந்திய நேரம்)