Primary tabs

கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாராயினார்,
அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35)
இதுவுமது
சூத ரேத்திய துயிலெடை நிலையுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறவியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ்
சிறந்த நாளணி செற்ற நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும்
மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும்
மன்னெயி லழித்த மண் ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவள னேத்தி
நடைவயிற் றோன்று மிருவகை விடையும்
அச்சமு முவகையு மெச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங்
காலங் கண்ணிய வோம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற்
கால மூன்றொடு கண்ணிய வருமே.
இதுவும் அது.
(இ-ள்) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய
துயிலெடை நிலையும் - தமது வலியாலே பாசறைக்கண் ஒரு
மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக்
கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்;
‘கிடந்தோர்க்’ கெனப்
பன்மைகூறவே, அவர் துயிலெடுப்புத்
தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ், சூதர் மாகதர் வேதாளிகர்
வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தான் துயின்றாரைத்
துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையுங்
கூறப்படுமென்பதூஉங் கொள்க. அவர் அங்ஙனந் துயின்றமை
பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம்
உளதாயிற்று.
உ-ம்:
‘‘கானம்