தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5112


பொருந்திய கயவாய் மகளிரின்
யானுறந் துயர நந்திய பானாள்
இமையாக் கண்ணோ டமையாக் காத்தநின்
மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப்
போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ
சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய
வண்கை யவுண னுயிர்செல வாங்கவ
னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய
வாடா வஞ்சி மலைந்த சென்னிப்
போரடு தானைப் பொலந்தேர் வளவ
நின் றுயி லெழுமதி நீயும்
ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே’’

என வரும்.

கூத்தரும்     பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு  அறிவுறீஇச்  சென்று  பயனெதிரச்  சொன்ன பக்கமும்
-ஆடன்மாந்தரும்   பாடற்பாணரும்  கருவிப்  பொருநரும்  இவருட்
பெண்பாலாகிய     விறலியுமென்னும்    நாற்பாலாருந்   தாம்பெற்ற
பெருஞ்செல்வத்தை  எதிர்வந்த  வறியோர்க்கு  அறிவுறுத்தி அவரும்
ஆண்டுச்சென்று    தாம்   பெற்றவையெல்லாம்   பெறுமாறு  கூறிய
கூறுபாடும்;

கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற்றொழிற்கு
உரியோர்களும்    பாரதி    விருத்தியும்    விலக்கியற்    கூத்துங்
கானகக்கூத்துங்       கழாய்க்கூத்தம்      ஆடுபவராகச்     சாதி
வரையறையிலராகலின்  அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந்
தத்தஞ்   சாதியில்   திரியாது  வருதலிற்  சேரவைத்தார்;  முற்கூறிய
முப்பாலோருட்  கூத்தராயினார்  எண்வகைச்  சுவையும் மனத்தின்கட்
பட்டகுறிப்புக்களும்   புறத்துப்   போந்து  புலப்பட  ஆடுவர்;  அது
விறாலாகலின்   அவ்   விறல்பட   ஆடுவாளை   விறலி  யென்றார்.
இவளுக்குஞ்  சாதிவரையறை  யின்மையிற்  பின்வைத்தார். பாணரும்
இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணரு மெனப்  பலராம்.
பொருநரும்  ஏர்க்களம்  பாடுநரும்  போர்க்களம்  பாடுநரும்  பரணி
பாடுநருமெனப்    பலராம்.    விறலிக்கு    அன்னதொரு   தொழில்
வேறுபாடின்றித்   தொழிலொன்றாகலின்   விறலியென   ஒருமையாற்
கூறினார்.

ஆற்றிடைக் காட்சி உறழத்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:53:01(இந்திய நேரம்)