Primary tabs

பயனெதிரச் சொன்ன பக்கமும் -இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய
நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத்
தோன்றுகையி னானே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய
செல்வத்தை யாண்டுந் திரிந்து பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றாற்
பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக்
கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்;
‘பக்க’மென்றதனானே அச்செய்யுள்களைக் கூத்தராற்றுப் படை,
பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப் படை,
முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப்
பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க.
உ-ம்:
‘‘வான்றோய் வெண்குடை வயமா வளவன்
ஈன்றோர் தம்மினுந் தோன்ற நல்கினன்
சுரஞ்செல் வருத்தமோ டிரங்கி யென்றும்
இரந்தோ ரறியாப் பெருங்கலங் சுரக்குவன்
சென்மதி வாழிய நீயே நின்வயின்
ஆடலு மகிழான் பாடலுங் கேளான்
வல்லே வருகென விடுப்பி னல்லது
நில்லென நிறுக்குவ னல்ல னல்லிசைப்
பெருந்தகை வேந்தர் கோலமொடு
திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே’’
(பத்து.மலைபடு.1)
‘‘திருமழை தலைஇய விருணிற விசும்பின்’’
இவை கூத்தராற்றுப்படை
‘‘பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
யூரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
யாரீ ரோவென வினவ லானாக்
காரெ னொக்கற் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்று
முடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கித்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்