Primary tabs

‘நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி’ (65, 6) யெனவுங் கூறி,
அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் ‘விழுமிய
பெறலரும் பரிசினல்கும்’ (294, 5) எனவுங் கூறி, ஆண்டுத் தான்
பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப்
புலவராற்றுப்படை என்று உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு
முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான்
மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால்
வீடுபெறுதற்குச் சமைந்தான்ஓரிரவலனை ஆற்றுப்படுத்த தென்பது
பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட்
செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர்
தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க.
இனி இசைப்புலவர்க்கும் நாடகப்
புலவர்க்கும் இங்ஙனங்
கூறலாமையாது; அவருள்
உயர்ந்தோரல்லாதாரும் அத்தொழிற்குப்
பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின்.
நாளணி செற்றம் நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்
- நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச்
சிறந்த
தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும்
வெள்ளணியும்;
அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறை
செய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த
தொழில்களாவன,
சிறைவிடுதலுஞ்
செருவொழிதலுங்
கொலையொழிதலும் இறைதவிர்தலுந் தானஞ்செய்தலும்
வேண்டின
கொடுத்தலும் பிறவுமாம்.
மங்கல
வண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க்கண்ணும்
அருளே நிகழ்தலின் அதனை ‘வெள்ளணி’ யென்ப. ஆகுபெயரான்