தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5116


அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று.

உ-ம்:

‘‘அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போன் மாண்ட களிறூரந்தார் - எந்தை
யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு.’’           (முத்தொள்.40)

இது  சிலம்பி  கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற்றென்றலின்
வெள்ளணியாயிற்று.

‘‘செய்கை யரிய களவழிப்பா முன்செய்த
பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி
கொலைச்சிறைதீர் வேத்துக் குழாம்’’

இது சிறைவிடுதல் கூறிற்று.

‘‘கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்’’           (முத்தொள்.39)

இது செருவொழிந்தது.

‘‘ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான்
வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு
காம நுகருமின் கண்படுமி னென்னுமே
யேம முரசின் குரல்’’

இதனுள்  இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர்
கூறுதல்  ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கலமென்றதனானே
பக்கநாளுந் திங்கடோறும்  வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை
யுணர்க.

சிறந்த     சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய
மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்;

இதனைப்     பிறந்தநாளின்  பின்வைத்தார், பொன்முடி புனைந்த
ஞான்று   தொடங்கி  யாண்டுதோறும் இது  வருமென்றற்கு.  குறுநில
மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும்
கொள்க.

உ-ம்:

‘‘அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:53:47(இந்திய நேரம்)