Primary tabs

ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை
முதலியன கூறித் தான் குறித்த பொருண்மையினைச் செலுத்திக்
கடாவின நிலையும்;
கடைக்கூட்டு நிலையும்
- வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய
கருமத்தினை முடிக்கும் நிலையும்;
இதுவும்
இழிந்தோர் கூற்றாயிற்று; இருத்தலே அன்றிக் கடாவுதலின்.
‘நிலை’ யென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங்
குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.
உ-ம்:
‘‘ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி
னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையின் தோலொடு திரங்கி
யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழுஉந்தன் மகக்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே’’
(புறம்.164)
இது பரிசில் கடாநிலை.
‘‘மதியேர்
வெண்குடை யதியர் கோமான்
கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியற்
பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
யொருகண்
மாக்கிணை யொற்றுபு