தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5123


‘‘ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிது
மீத லெளிதே மாவண் டோன்ற
லதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே’’     (புறம்.121)

இது சிறிதென்ற விடை.

‘‘இரவலர் புரவலை நீயு மல்லை
புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர்
இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க்
கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் றோன்றல் செல்வல் யானே’’        (புறம்.162)

இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை.

‘‘வேழம்  வீழ்த்த   விழுத்தொடைப்   பகழி’’ என்னும் (152)
புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்பார்க்குக் கூறியது.

‘‘நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே’’       (புறம்.163)

இது மனைவிக்குக் கூறியது.

நாளும்     புள்ளும்  பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும்
எச்சமின்றிக்  காலங்கண்ணிய  ஓம்படை  உளப்பட  -  நாணிமித்தத்
தானும்        புண்ணிமித்தத்தானும்       பிறவற்றினிமித்தத்தானும்
பாடாண்டலைவர்க்குத்  தோன்றிய  தீங்குகண்டு  அஞ்சிய  அச்சமும்
அது  பிறத்தற்குக்  காரணமாகிய  அன்பும்  ஒழிவின்றிப் பரிசிலர்க்கு
நிகழ்தலின்   அவர்   தலைவர்   உயர்வாழும்  காலத்தைக்  கருதிய
பாதுகாவன் முற் கூறியவற்றோடே கூட.

ஒரு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:55:09(இந்திய நேரம்)