Primary tabs

பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடியவழி
அவன் நாண்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி
அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண்
தோன்றிய நிமித்தம். ‘‘புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும்’’
(புறம்.20) பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கண்
தோன்றிய நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும்
ஓரிக்குர லுள்ளிட்டனவுங், கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர்
மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளைதோன்றுதலுந்
தண்சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண்
தோன்றிய நிமித்தம்.
உவமை - அன்பு.
இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு
நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம்
வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை
கூறுதலின் அது ‘காலங்கண்ணிய ஓம்படை’ யாயிற்று. எஞ்ஞான்றுந்
தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவற்கு இன்னாங்கு வந்துழிக்
கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின்றேனும் முன்னர்ப் பெற்ற
பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று.
இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த
புகழுங் கூறிற்று.
‘‘நெல்லரியு
மிருந்தொழுவர்’’ என்னும் (24) புறப்பாட்டினுள்
‘‘நின்று நிலைஇயர்நின் னாண்மீன்’’
என அவனாளிற்கு முற்கூறிய
வாற்றான் ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை
கூறியது.
உ-ம்;
‘‘ஆடிய வழற்குட்