தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5241


 

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்லியாழ்த் துணைமையோர்இயல்பே.

இவ்  வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு
உணர்த்தினமையிற்   களவியலென்னும்  பெயர்த்தாயிற்று;  பிறர்க்குரித்
தென்று  இரு  முதுகுரவரான்  கொடையெதிர்ந்த  தலைவியை  அவர்
கொடுப்பக் கொள்ளாது இருவருங்  கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப்
புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற்கொள்ளுங்
களவன்றாயிற்று. இது வேதத்தை ‘மறைநூல்’ என்றாற்போலக் கொள்க.

“களவெனப் படுவது யாதென வினவின்
வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன்
விளையாட் டிடமென வேறுமலைச் சாரல்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடும்
ஆயமுந்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:17:51(இந்திய நேரம்)