Primary tabs


விலியர் தவிர்ப்பவுந் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே.”
(குறுந்.229)
இஃது ஓரூர் என்றதாம்.
“காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறுந்.2)
என்றது என் நிலத்து வண்டாதலின் எனக்காகக்
கூறாதே சொல்
என்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று.
“இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை”
என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும்
அருவித்தென
வியந்துகூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும்
மலை வேறாயிற்று.
“செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன்
பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ
கௌவைநோய் உற்றவர் காணாது கடுத்தசொல்
ஒவ்வாவென்றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை.”
(கலி.76)
இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பௌவநீர்ச்
சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய்
தனிலத்து எதிர்ப்பட்டமை
கூறியது. ஆணை விதி. கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும்
ஒன்றும் வேறுஞ் செல்லும். பாலது ஆணையும் அவ்வாறாம்.
மிகுதலாவது: குலங்கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே,
அந்தணர், அரசர் முதலிய வருணத்துப்
பெண்கோடற்கண் உயர்தலும்,
அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங்
கொள்க. இதனானே
அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும்
இவ் வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி, மிகுதி.
அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு
ஒழிந்த மகளிர் பெற்ற
புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப்
பெரிதும் வரையப்படாதென்