தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5248


 

றார்.     பதினாறு   தொடங்கி   இருபத்து  நான்கு  ஈறாகக்  கிடந்த
யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்று  யாண்டாக  அந்தணன்
உயருங்  கந்தருவ  மணத்து;  ஒழிந்தோ  ராயின்  அத்துணை உயரார்.
இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல்பிரம முதலியவற்றான் உணர்க.
‘வல்லெழுத்து மிகுதல்’ என்றாற்போல மிகுதலைக் கொள்ளவே பிராயம்
இரட்டியாயிற்று.   கிழத்தி  மிகுதல்  அறக்கழிவாம்.  ‘கிழவன் கிழத்தி’
எனவே பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம்
ஒருமை   கூறிற்றேனும்   ‘ஒருபாற்கிளவி’  (தொல்.பொ.222)  என்னுஞ்
சூத்திரத்தான்  நால்வகை  நிலத்து  நான்கு  வருணத்தோர்  கண்ணும்
ஆயர்  வேட்டுவர் முதலியோர்   கண்ணுங்   கொள்க.   இச்சூத்திரம்
‘முன்னைய    நான்கும்’   (தொல்.பொ.52)   எனக்கூறிய    காட்சிக்கு
இலக்கணங் கூறிற்றென் றுணர்க.

உ-ம்:

“கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும்பணைத்தோள்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தஎங் கண்ணே”
                              (புற.வெ.மாலை.கைக்.1)

இக்காட்சிக்கண்   தலைவனைப்போல்   தலைவி  வியந்து  கூறுதல்
புலனெறிவழக்கன்மை உணர்க. (2)

ஐயம் நிகழுமிட மிதுவெனல்

93. சிறந்துழீ ஐயஞ் சிறந்த தென்ப
இழிந்துழி யிழிபே சுட்டலான.

இஃது  எய்தாத  தெய்துவித்து  எய்தியது  விலக்கிற்று, ‘முன்னைய
நான்கும்’(தொல்.பொ.52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன் கண்ணதே
எனவுந்   தலைவிக்கு   நிகழுமோ   என்னும்  ஐயத்தை விலக்குதலுங்
கூறலின்.

(இ-ள்.) சிறந்துழி  ஐயம்  சிறந்தது  என்ப  -  அங்ஙனம்  எதிர்ப்
பாட்டின்  இருவருள்ளுஞ்  சிறந்த  தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல்
சிறந்ததென்று கூறுவர்  ஆசிரியர்;  இழிந்துழி  இழிபே  சுட்டலான  -
அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:19:14(இந்திய நேரம்)