Primary tabs


பாடறிந்து தன்ஐமார்
நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற்
படுபுலால் காப்பாள் படை நெடுங்கண் ணோக்கங்
கடிபொல்லா வென்னையே காப்பு.”
(திணை.நூற்.32)
இனி முயங்கி மகிழ்ந்து கூறுவன:
“கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாயது முயங்கற்கும் இனிதே.”
(குறுந்.62)
“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.”
(குறள்.1107)
உரையிற் கோடலான் மொழிகேட்க
விரும்புதலுங் கூட்டிய
தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க.
தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரைநிகழ்தலு
முண்டென்றற்குக் காரணங் கூறல்
97. பெருமையும் உரனும் ஆடூஉ மேன.
இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி, இனி உள்ளப்
புணர்ச்சியே
நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பதூஉம் இவ்விருவகைப்
புணர்ச்சிப்
பின்னர்க் களவின்றி
வரைந்து கோடல் கடிதின்
நிகழ்தலுண்டென்பதூஉம் உணர்த்துகின்றது.
(இ-ள்.) பெருமையும்
- அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும்
ஆராய்தலும்
பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய்
மேற்படும்
பெருமைப் பகுதியும்; உரனும் - கடைப்பிடியும் நிறையுங்
கலங்காது
துணிதலும் முதலிய வலியின் பகுதியும்;
ஆடூஉ மேன -
தலைவன் கண்ண எ-று.
இதனானே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும்
உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி
நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது
வரைந்துகோடலும்,
உள்ளஞ் சென்றுழியெல்லாம் நெகிழ்ந்தோடாது
ஆராய்ந்து
ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தானாயுந்
தோன்றாமல்
மறைத்தலுந், தீவினையாற்றிய பகுதியிற்
சென்ற உள்ளம் மீட்டலுந்
தலைவற்கு உரியவென்று கொள்க.
“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு”
(குறள்.422)
எனவரும்.
பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும், அவ்வுரனான் மெய்யுறு புணர்