தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5253


 

ச்சி  இலனாதலும்  உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு
மெய்யுறு  புணர்ச்சி  நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற்
கூறுப.      இனி     இயற்கைப்புணர்ச்சி     இடையீடு     பட்டுழி
இடந்தலைப்பாட்டின்கண்  வேட்கை  தணியாது நின்று கூடுபவென்றும்,
ஆண்டும்     இடையீடு     பட்டுழிப்பாங்கனாற்     கூடுபவென்றும்,
உரைப்போரும்    உளர்;    அவர்    அறியாராயினார்;    என்னை?
அவ்விரண்டிடத்தும்  இயற்கைப்  புணர்ச்சிக்கு  உரிய   மெய்ப்பாடுகள்
நிகழ்ந்தே கூட வேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப்
பெயர் கூறலன்றிக்  காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும்  பாங்கொடு
தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க. (7)

தலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில்

நிகழ்தற்குக் காரணங் கூறல்

98. அச்சமும் நாணும் மடனுமுந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.

இது, மேலதே போல்வதொரு விதியை   உள்ளப்புணர்ச்சி   பற்றித்
தலைவிக்குக் கூறுகின்றது.

(இ-ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும்; நாணும்-
காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கமும்;  மடனும்  -
செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது  விடாமையும்;  முந்துறுத்த-
இம்மூன்று முதலியன; நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப-எஞ்ஞான்றும்
பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘முந்துறுத்த’ என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத
பயிர்ப்பும், செயத்தகுவது    அறியாத    பேதைமையும்,   நிறுப்பதற்கு
நெஞ்சுண்டாம்    நிறையுங்    கொள்க.    மடன்    குடிப்பிறந்தோர்
செய்கையாதலின்   அச்சமும்  நாணும்போல  மெய்யுறு   புணர்ச்சியை
விலக்குவதாம்.    தலைவி   இவற்றை   உடையளெனவே   தலைவன்
பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை  மீதூரவும்  பெறுமாயிற்று.
இவை   இவட்கு   என்றும்  உரியவாயின்   இயற்கைப்  புணர்ச்சிக்கு
உரியளல்லளாமாயினும்   இவ்விலக்கணத்தின்   திரியாது   நின்றேயும்
புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார்.
இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:20:13(இந்திய நேரம்)