Primary tabs


வேய்பயி லிறும்பின் ஆம்ஊறல் பருகும்
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்
சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த
செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனங் காவலும் நுமதோ
கோடேந் தல்குல் நீள்தோ ளீரே.”
(நற்.213)
இஃது ஊரும்பிறவும் வினாயது.
“கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றேன்
எல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற
பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீர்
ஈங்கிதுவோ நும்முடைய வூர்.”
இஃது ஊர் வினாயது.
“செறிகுர லேனற் சிறுகிளி காப்பீர்
அறிகுவே னும்மை வினாஅய் - அறிபறவை
அன்னம் நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர்
என்ன பெயரிரோ நீர்.”
இது பெயர் வினாயது.
“நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளான்
உறையெதிர்ந்து வித்தியவூழ் ஏனற் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
ஏமரை போந்தன வீண்டு.”
(திணை.நூற்.1)
“தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கால்
எங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின்
வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறிரோ
வன்றி படர்ந்த வழி.”
வன்றி - பன்றி
“தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை
மண்டுபு கவரு மாண்டகிளி மாற்றும்
ஓண்டொடிப் பணைத்தோ ளொண் ணுத லிறையீர்
கண்டனி ராயிற் கரவா துரைமின்
கொண்டன குழுவி னீங்கி மண்டிய
உள்ளழி பகழியோ டுயங்கியோர்
புள்ளி மான்கலை போகிய நெறியே.”
இவை கெடுதிவினாயின.
“மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ”
(அகம்.110)
எனவும்,
“இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரின்
தீது முண்டோ மாத ரீரே”
(அகம்.230)
எனவும் வருவன, ‘பிறவு’ மென்றதனாற் கொள்க.
குறையுறூஉம் பகுதி, குறையுறுபகுதி எனவுமாம்;